×

தொடங்கியது போர்!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு..சவரன் ரூ.38,616க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார். அதனையடுத்து உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவு கண்டன. தங்கம், எண்ணெய் ஆகியவற்றின் விலை மளமளவென்று அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 864 உயர்ந்து ரூ.38,616க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.108 உயர்ந்து ரூ.4,827க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.90 உயர்ந்து ரூ.70.60க்கு விற்பனையாகிறது. ஒருகிலோ ரூ.70,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 குறைந்து, ரூ.5,166க்கும், இதே சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.41,32க்கும், 10 கிராமுக்கு 51,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த திடீர் விலையேற்றம் நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. உக்ரைன் நாட்டை ரஷ்ய படைகள் தாக்கி வருவதால் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுகள் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்துள்ள நிலையில் இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் எதிரொலியாக இந்திய பங்குசந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. சென்செக்ஸ் 2045 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 55,186 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. …

The post தொடங்கியது போர்!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு..சவரன் ரூ.38,616க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Savaran ,President ,Vladimir Putin ,Ukraine ,Dinakaran ,
× RELATED மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை: சவரன் எவ்வளவு தெரியுமா?